வியாழன், 2 ஜூன், 2011

காதல்


மென்பொருள் எழுதுவதற்கு என்ன வேண்டும்? என்னை பொறுத்த வரையில் மென்பொருள் கற்பவர்களுக்கு மிகவும் தேவையானது ஒரு வெறித்தனமான ஆர்வம் & காதல் (Passion). இந்த ஆர்வமே மற்ற அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்! மென்பொருள் எழுதும் போது பசி, தூக்கம், நம்மை சுற்றி நடப்பவை எதுவும் தெரியாமல், ஒன்றி போக முடிந்தால் அவர்களே மென்பொருள் வல்லுநர் ஆக முடியும். ஏன் இந்த ஆர்வம்? மற்றவர்கள் வியக்கும் வண்ணம் எதையாவது உருவாக்குவதில் தான் எத்தனை சந்தோசம்! அப்படி உருவாக்குவது பலருக்கும் பயன்படும் என்றால் அதை விட பெரிய சந்தோசம் இருக்க முடியுமா? வேறு துறைகளில் எதையாவது உருவாக்குவது என்றால் அதற்கு பெரும் முயற்சி வேண்டும். பணம், உதவிக்குப் பலர்,  உடல் உழைப்பு, இன்னும் பல தேவை படுகிறது. அனால் மென்பொருள் எழுதுபவருக்குத் தேவை ஒரு கணினி மட்டுமே. பிறகு எல்லாமே மாயம் தான். நம் விரல்களை அசைக்க அசைக்க பல விந்தைகள்! நம்முடைய பொழுது போக்கே மென்பொருள் எழுதுவது என்றால் நாள் முழுவதும், இரவு முழுவதும் நமக்கு பிடித்ததை செய்து கொண்டே இருக்கலாம். அதுவே நமக்கு பொருள் ஈட்டியும் கொடுக்கும். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆயினும் மென்பொருள் எழுதுவதில் அனைவருக்கும் இந்த சந்தோசம் கிடைப்பது இல்லை. ஆகையால் மென்பொருள் எழுதி இன்புறுபவர்கள் மட்டும் மென்பொருள் பயில்வது நல்லது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக